Home » பூரண பூரி
உணவு

பூரண பூரி

சப்பாத்தியா பூரியா என்ற வாக்கெடுப்பில் குழந்தைகள் வெற்றி பெற வைப்பது பூரியையே. மாற்றம் தேவை என்பதற்காக இல்லை. எண்ணெய்யில் பொரிக்கப்பட்டு மொறுமொறு ருசியுடன் இருக்கும்.

சீஸ், தக்காளி சாஸ் என மயக்கும் வெளிநாட்டு உணவுப் பொருள்களுக்குப் போட்டியாக நம்மிடம் இருப்பது பூரியே. அதையும் பி டீமுடன் ரகசியமாகச் சேர்ந்து சத்துள்ளதாக மாற்றிவிட்டால் பெற்றோர்களின் கவலை தீர்ந்துவிடும். பி டீம் என்று குறிப்பிட்டது நமது பெங்காலி நண்பர்களுடன் சேர்ந்து தால் பூரி செய்வதை.

மைதா அல்லது கோதுமை மாவை பூரி சுடும் பதத்துக்குப் பிசைந்து வைக்க வேண்டும். நெய் சேர்த்துப் பிசைந்தால் அதிக நேரம் மொறுமொறுவென்று இருக்கும். சூடாறியவுடன் மிருதுவாகி விடாது. உப்பும் மஞ்சளும் சேர்த்து கடலைப் பருப்பை குக்கரில் அளவாக வேக வைக்க வேண்டும். அதைத் தண்ணீர் விடாமல் மிக்சியில் அரைத்தால் பிசையுமளவு வெந்திருக்க வேண்டும், அதே சமயம் குழைந்துவிடக் கூடாது. புட்டுக்கு மாவு பிசைவதைப் போல, சேர்த்துப் பிடித்தால் பிள்ளையாராக்கும் அளவுக்கு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!