209. சஞ்சய் மரணம்
டெல்லி ஃப்ளையிங் கிளப் வளாகத்திலிருந்து சஞ்சய் காந்தி தன் குட்டி விமானத்தில் புறப்பட்டார். அனுபவமிக்க விமானியாக இருந்த சாக்ஸனாவிடம் தன் விமானம் ஓட்டும் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆசை சஞ்சய்க்கு மிகுதியாகவே இருந்தது.
அவர் விமானத்தில் இந்திரா காந்தி வசித்த சஃப்தர்ஜங் ரோடு மற்றும் வில்லிங்டன் கிரசன்ட் பகுதிகளின் மேல் வானில் வலம் வந்தார். திடீரென்று விமானத்தை ஆயிரம் அடி உயரத்துக்கு விரட்டினார்.
அத்தனை உயரத்தில் இருந்தபோது, சமர் சால்ட் என்று சொல்லக் கூடிய சில ஆகாயச் சாகசச் சுழற்சிகளைச் செய்து காட்டத் தொடங்கினார். ஏனோ தெரியவில்லை, திடீரென்று கீழ் நோக்கிப் பாய்ந்த அந்த விமானம் மீண்டும் மேலே எழும்பவில்லை.
கீழ் நோக்கி வேகமாகப் பாயத் தொடங்கிய விமானம், வெலிங்டன் கிரசன்ட் பகுதியில் இருந்த சில மரங்களின் மீது மோதி நொறுங்கியது. சஞ்சய்யும் சாக்ஸனாவும் ஸ்தலத்திலேயே உடனடியாக உயிரிழந்தனர்.















Add Comment