43. காணாத காட்சி ‘கானகத்தைத் தாண்டினால் ஒரு குன்று, குன்றின் மறுபுறமாக ஆறு காதம் கடந்தால் அந்த பிராமணனின் இருப்பிடம் வந்துவிடும் என்று நீ எப்போது என்னிடம் சொன்னாய்?’ என்று அந்த சூத்திர முனியிடம் கேட்டேன். அவன் என்னை வினோதமாகப் பார்த்தான். ‘நான் எப்போது சொன்னேன்?’ என்று என்னையே மீண்டும் கேட்டான்...
Tag - நாவல்
126 தேவைகள் ‘எனக்கான தேவைகள் மிகவும் குறைவு’ என்று பச்சையப்பாஸ் கல்லூரி மாணவனாக பரீக்ஷாவில் சேர்ந்த புதிதில் ஞாநியிடம் எதைப்பற்றிய பேச்சுக்கிடையிலோ சொன்னான். ‘அப்படியா சொல்றே’ என்றார் உடைந்த தொண்டையில். ‘ஆமா. எனக்கென்ன பெரிய தேவை இருக்கு. பெரிய ஆசையே இல்லாதப்ப பெருசா தேவைனு என்ன இருக்கப்போகுது.’...
42. ஒற்றைத் தர்ப்பம் பகைவரின் கோட்டையைப் பதுங்கி நெருங்கும் படையினைப் போல வனத்துக்குள் நுழைந்த நதி சுழித்துச் சுருண்டோடத் தொடங்கியது. கவனத்தை நான் அதன் தடத்தின்மீது பதித்தபோது எட்டு பைசாசங்கள் எதையோ தேடி அலைந்து திரிவது முதலில் தென்பட்டது. கணப் பொழுதில் எனக்கு விளங்கிவிட்டது. கன்னுலா தேவி...
41. அவித்யா நான் குத்சன். ஒளித்து வைக்க ஒன்றுமில்லாதவன் என்பதே என் அகங்காரம். என் வெளிப்படைத்தன்மையே அந்த சார சஞ்சாரனை முதன்மையாகக் கவர்ந்தது என்பதை அறிவேன். அதை இறுதிவரை காப்பாற்றவும் சித்தம் கொண்டிருந்தேன். ஆனால் அவனோடு நிகழ்த்தும் உரையாடல்களில் என்னையும் அறியாமல் சில குறிப்புகள் எப்படியோ...
40. தேடித் திரிந்தவை வனங்களின் தாயை அன்றி இன்னொன்றினைத் தொழாத மாமன்னன் சம்பரனின் வம்சத்தில் தோன்ற விதிக்கப்பட்ட சிலவன் நான். இறந்து எழுபது சம்வத்சரங்கள் பூர்த்தியாகிவிட்டன. ஆயிரமாயிரம் ஆரிய வீரர்களுக்கும் பராக்கிரமசாலிகளான அவர்களது பேரரசர்களுக்கும் அவர்களை வழிநடத்திய பரத்வாஜன், விசுவாமித்திரன்...
39. ரசமணி நான் கன்னுலா. என்னைக் குலம் காக்கும் தெய்வமாக எங்கள் மக்கள் வணங்குவார்கள். சற்று விலகி நின்று என்னை நானே கவனித்தால் எல்லாமே அபத்தமாகத் தெரிகிறது. தெய்வமாகி என்ன, குலம் காக்க முடிந்தென்ன. என்னால் என் சகோதரனின் மனத்தை மாற்ற முடியவில்லை என்பதுதான் என் எல்லையைச் சுட்டிக்காட்டும் புள்ளியாக...
38. கையாள் கன்னுலா அந்தப் பட்சியிடம் சொல்லியனுப்பிய தகவலைத் தெரிந்துகொண்ட பின்பும் நான் எதனால் அந்த முனியுடன் கூடவே என் பிரயாணத்தைத் தொடர்ந்தேன் என்பதற்கு ஒரு காரணம் உள்ளது. அவளுக்கு முனியைப் பற்றி என்ன தெரிந்தது, எவ்வளவு தெரியும் என்பதை நான் அறியேன். அவன் ஒரு பூரண அயோக்கியன் என்பதற்கு அவளிடம்...
37. மணற்சூறை ஊர் மொத்தமும் பேசி முடித்துவிட்டது. இனி சொல்லவும் புலம்பவும் கதறவும் ஒன்றுமில்லை என்பது போல வாய் மூடி நின்றுகொண்டிருந்தார்கள். ரிஷி பேசவேயில்லை. அவர் யாரையும் பார்க்கவுமில்லை. எப்போதும் திறந்திருக்கும் அவரது வலக்கண் சர்சுதியையே இமைக்காமல் பார்த்துகொண்டிருந்தது. அவரது சிறு அசைவுக்காகக்...
36. சல புத்ரன் அன்றைய நாளை என்னால் மறக்க முடியாது. விடிந்ததிலிருந்தே எல்லாம் வினோதமாக இருந்தது. வனத்தில் எங்கள் குடிசை இருந்த எல்லைப் பகுதியில்தான் ஏராளமான பட்சிகளும் வசித்துக்கொண்டிருந்தன. ஒவ்வொரு நாளும் புலரும் நேரத்தில் ஆயிரமாயிரம் பட்சிகள் கூக்குரலிட்டுக்கொண்டு நாலாபுறமும் பறந்து வான்...
125 விஸ்கி மதிய உணவு நேரத்தில், இவன் சீட்டுக்குப் பின்னால் இருந்த ஈ ரேஞ்சிற்கு, எப்போதாவது ஒருவர் வலது கையைத் தொடைமேல் வைத்தபடி இழுத்து இழுத்து நடந்து வருவதைப் பார்த்திருந்தான். இன்ஸ்பெக்டர் பிரமோஷனுக்கு சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்கவேண்டும் என்று, சைக்கிள் ஓட்டத் தெரிந்திருந்தாலும் நன்றாக...














