இத்தாலியின் பிரதமர் மெலோனிக்கு இந்தியப் பிரதமர் மோடி, ‘மெலோடி’ சாக்லெட்டைப் பரிசளித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பரிமாறினார் இந்தியப் பிரதமர். அவை எல்லாவற்றையும் விட இந்த சாக்லெட் பரிமாற்றம் இணையத்தில் பிரபலமாகி பங்குச்சந்தை வரை எதிரொலித்தது.
சில மாதங்களாக அமெரிக்க அதிபரின் அன்றாட அவசரச் செய்திகளுக்கு ஏற்ப ஏறி இறங்கிக் களைத்திருந்தது பங்கு வர்த்தகம். இரு பிரதமர்களின் இனிப்புப் பரிவர்த்தனை, முதலீட்டாளர்களுக்குத் தேவைப்பட்ட ஊக்கத்தைக் கொடுத்தது. அந்த சாக்லெட்டைத் தயாரிக்கும் நிறுவனம் என நினைத்து வேறொரு நிறுவனத்தின் பங்குகளில் முண்டியடித்து முதலீடு செய்தார்கள். பாவம், இதனால் முதலீட்டாளர்களுக்கோ மெலோடி சாக்லெட்டைத் தயாரிக்கும் நிறுவனத்துக்கோ லாபம் கிடைக்கவில்லை.
மெலோடி சாக்லெட்டைத் தயாரிப்பது பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத ஒரு தனியார் நிறுவனம். ஆனால் பார்லே என்ற பெயரில் தொடங்கும், பங்குச்சந்தையில் விற்பனைக்கிருந்த இன்னொரு நிறுவனத்தின் பங்குகளை இந்த முதலீட்டாளர்கள் பெருமளவு வாங்கிக் குவித்திருந்தார்கள். விளம்பர மோகத்தால் ஆராய்ச்சி செய்யாமல் முதலீடு செய்து நஷ்டமடைந்துள்ளார்கள்.
















சாக்லெட் கட்டுரை சாக்லெட்டே வேண்டாம் என்பவர்களைக்கூட
அதைத் தேட வைக்கும் வகையில் இருக்கிறது.
பாபநாசம் நடராஜன்