Home » 24 – நான்கு
24 தொடர்கள்

24 – நான்கு

24

4. இடைக்காலத்தின் அறிவியல் ஒழுங்கு

இப்னு சீனா

 

கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டின் புகாரா நகரம். தற்போது உஸ்பெகிஸ்தானில் இருக்கும் இந்நகரம், இஸ்லாமியப் பொற்காலத்தின் அறிவுத் தலைநகரமாக இருந்தது. அங்கு வாழ்ந்த இப்னு சீனா, மேற்கத்திய உலகத்தால் ‘அவிசென்னா’ என்று அழைக்கப்பட்டார். அவரது இருபத்தி நான்கு மணிநேரமும் நோயாளிகளின் நாடித்துடிப்பைக் கணிப்பதிலும், தத்துவப் பிரபஞ்சத்தை ஆராய்வதிலும் ஓய்வின்றிச் சுழன்றன.

அக்கால இஸ்லாமிய உலகின் பொழுதுகள், மசூதிகளில் இருந்து ஒலிக்கும் தொழுகைக்கான ‘அதான்’ அழைப்புகளையும், சூரியக் கடிகாரங்களையும் வைத்தே கணக்கிடப்பட்டன.

சூரியன் உதிப்பதற்கு முன்பே இப்னு சீனா கண் விழிப்பது வழக்கம். விடியற்காலைத் தொழுகையான ‘ஃபஜ்ர்’ வழிபாட்டோடு அவரது அன்றாடப் பணிகள் தொடங்கின. அதன் பிறகு ஓர் எளிய கம்பளி அங்கியை அணிவார். அக்காலத்தில் சூஃபிகளின் புற அடையாளமாகக் கம்பளி இருந்தது. தொழுகையை முடித்துக் கொண்டு தனது நூலகத்துக்குள் நுழைவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதிகாலை அமைதியில், குர்ஆனின் ஆன்மிகக் கருத்துகளையும், அரிஸ்டாட்டிலின் தத்துவங்களையும் ஒப்பிட்டுத் தனது குறிப்பேடுகளில் எழுதுவார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!