சுட்டெரிக்கும் வெயில், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்த வறண்ட மணல்பரப்பு, சுழன்றடிக்கும் வெப்பக் காற்று. இப்படிப்பட்ட ஒரு பாலைவனத்தில், வெறும் நாற்பது நாட்களில் பச்சைப் பசேல் எனக் கொடிகள் பரவி, அவற்றில் குளுமையான தர்பூசணிகள் காய்த்துக் கிடந்தால் எப்படி இருக்கும்?
ஏதோ அறிவியல் புனைகதையில் வரும் காட்சி போலத் தோன்றலாம். ஆனால் இந்த விந்தையை நார்வே நாட்டு விஞ்ஞானி கிறிஸ்டியன் ஓல்சென் தனது விடாமுயற்சியால் நிஜமாக்கிக் காட்டியுள்ளார். விவசாய உலகின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய இந்தக் கண்டுபிடிப்பின் பெயர் ‘லிக்விட் நானோ கிளே’ (Liquid Nano Clay – LNC).
இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான வரலாறு உள்ளது. பல நூற்றாண்டுகளாக எகிப்தின் நைல் நதி, தன் நீரோட்டத்தில் அடித்துவந்த நுண்ணிய வண்டல் மண்ணால் கரையோர நிலங்களை வளமாக்கியது. ஆனால் நைல் நதியின் குறுக்கே அஸ்வான் அணை கட்டப்பட்ட பிறகு, அந்த இயற்கைச் சுழற்சி பாதிக்கப்பட்டது. நிலத்தின் செழுமையும் படிப்படியாகக் குறையத் தொடங்கியது.
















Add Comment