Home » பொய்யோடு விளையாடு – 4
தொடர்கள் பொய்யோடு விளையாடு

பொய்யோடு விளையாடு – 4

poi

பொய்யறிவதில் நாம் எப்படி?

நாம் சொல்லும் பொய்களில் பெரும்பாலானவை வெள்ளைப் பொய்கள்தான். வெள்ளைப் பொய்களை நாம் பொய்களாகவே உணர்வதில்லை. பச்சைப் பொய்களைச் சொல்லும்போது ஏற்படும் பதற்றமும் குற்ற உணர்வும் வெள்ளைப் பொய்களில் ஏற்படுவதில்லை. மனத்தளவில் வெள்ளைப் பொய்கள் வாய்மையிடத்து வைக்கப்படுவதுதான் அதற்குக் காரணம்.

இங்கு நாம் கவனிக்கவேண்டியது, வெள்ளைப் பொய்களே ஆனாலும் அவையும் பொய்களே என்பதைத்தான். அவற்றை அன்றாடம் சொல்கிறோம். தினந்தோறும் பயின்றுவரும் கலை என்பதால் அதில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருக்கிறோம்.

நினைவு தெரிந்த நாளிலிருந்தே நாம் பொய் சொல்லத் தொடங்கிவிடுகிறோம். குழந்தைகள் சுமார் ஐந்து வயதிலிருந்து பொய் சொல்லத் தொடங்குகிறார்கள். ஐந்து வயதுக்கு முன்பே பொய் சொல்லக் கற்றுக்கொள்ளும் குழந்தை புத்திசாலியாக இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். குழந்தைகளைப் போலவே அவர்களுடைய பொய்களும் எளிமையானவை, அழகானவை. குழந்தைப் பொய்கள் எனலாம். அவற்றை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!