Home » ஒரு குடும்பக் கதை – 214
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 214

214. காங்கிரஸ் தலைவலிகள்

டெல்லி பாலம் விமான நிலையத்தில் வந்து இறங்கிய ராஜீவ் காந்தியை வரவேற்க அவர் விரும்பியபடியே அவரது மனைவி, குழந்தைகள், நெருங்கிய நண்பர் அமிதாப் பச்சன் ஆகியோர் மட்டும் வந்திருந்தார்கள்.

இவர்களின் வருகையும், மற்ற எவரும் வராததும் ராஜீவ் காந்திக்கு இரட்டை மகிழ்ச்சியை ஏற்படுத்தின. சோனியா காந்திக்குத் தன் கணவரது தேர்தல் வெற்றியில் பெருமிதம் இருந்தது. குழந்தைகளுக்கு, ஒரு மாதத்துக்குப் பிறகு அப்பாவைப் பார்த்ததில் பெரும் சந்தோஷம்.

ஆனால், அன்றைய தினம் ராஜீவ் காந்தி தன் அக்பர் ரோடு அலுவலகத்துக்குப் போனபோது மிரண்டு போனார். அங்கே ஏராளமான கட்சிக்காரர்கள் திரண்டிருந்தார்கள்.

கட்சியின் புதிய அதிகார மையமாக உருவாகி இருக்கும் ராஜீவ் காந்தியின் கண்களில் தாங்கள் பட்டால், அது தங்களது அரசியல் எதிர்காலத்துக்கு உதவியாக இருக்கும் என்று நாடெங்கும் இருந்து பல காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் அங்கே திரண்டிருந்தார்கள். ராஜீவ் காந்தியை வாழ்த்தி கோஷங்கள் விண்ணைப் பிளந்தன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!