மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி. இதன் மூலம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இச்சூழலில், நேருவின் ஆட்சியையும் மோடியுடைய ஆட்சியையும் ஒப்பிட்டுக் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன கட்சிகளும் ஊடகங்களும்.
நவீன இந்தியாவின் சிற்பி எனப் புகழப்படும் நேருவுடன் மோடியை ஒப்பிடுவது பொருத்தமானதா என்ற கேள்வியை நடுநிலையாளர்கள் எழுப்புகின்றனர். அதேநேரம் ஒன்றை நாம் புறக்கணித்துவிட முடியாது. நேருவின் மறைவுக்குப் பின், பதினான்கு பிரதமர்களைப் பார்த்திருக்கிறது இந்தியா. அவர்களுள், நேருவுடன் ஒப்பிடக்கூடியவராகத் திகழ்பவர் மோடி மட்டுமே. இந்த இடத்தை அடைய என்ன செய்தார் மோடி?
நேருவும் மோடியும் ஆட்சி செய்த சூழல்கள் வெவ்வேறானவை. இருவருமே கடுமையான சவால்களை எதிர்கொண்டார்கள்; இருவரது ஆட்சிக் காலங்களிலும் இந்தியா புதிய உச்சங்களைத் தொட்டது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த ஒப்பீடு நியாயமானதா என்பதைச் சிந்திக்கவேண்டியுள்ளது.
















Add Comment