Home » பசுமைப் பெருஞ்சுவர்
உலகம்

பசுமைப் பெருஞ்சுவர்

சீனாவின் வடக்கு, வட மேற்குப் பகுதிகளில் இருக்கும் கோபி, தக்லமாக்கன் பாலைநிலங்கள் உலக அளவில் மிகப் பெரிய வறண்ட நிலங்கள். சீனாவுக்குத் தெற்கே உயர்ந்து நிற்கும் இமயமலைத் தொடர்கள், இந்தப் பகுதிகள் மழைப்பொழிவைப் பெறாத வண்ணம் தடுத்துவிடுகின்றன.

தக்லமாக்கன் பாலைநிலத்தில் ஏற்படும் மணல் புயல்கள் பல கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சீனாவின் விளை நிலங்களைப் பாழ் செய்து, விவசாயத்துக்கு வழியில்லாத பகுதியாக மாற்றிவிடுகின்றன. இதனால் நாட்டின் வடக்கு எல்லையில் இருக்கும் நிலங்கள் பாலைவனமாகத் தொடங்கின.

காலநிலை மாற்றம் முக்கியக் காரணம் என்றாலும், அங்குள்ள மக்கள் அந்நிலங்களைக் கையாளும் தன்மைக்கும் இதில் பங்கு உண்டு. சீனாவின் மூன்றில் ஒரு பகுதி நிலங்களை மணல் புழுதி தாக்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் இது அதிகமாகிக்கொண்டே போகிறது. இந்த மணல் புயல்கள் அருகில் உள்ள கிராமங்கள், நதிகள் மற்றும் நீர்நிலைகளைப் பாதிக்கின்றன. கோதுமை வயல்களைத் தாண்டி பெய்ஜிங் நகரம் வரை இந்தப் புயல்களின் தாக்கம் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நிலங்கள் பாலைவனங்களாக மாறின, தலைநகரம் வரை அதன் ஆபத்து உணரப்பட்டபோது, இதைத் தடுப்பதற்கான சில முக்கிய முடிவுகளை அவர்கள் எடுத்தார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!