பூமியில் இன்று வாழும் மிகப் பழைமையான, மிகப் பெரிய உயிரினம் எது என்று கேட்டால் நீலத் திமிங்கிலங்களோ அல்லது ஆப்பிரிக்கக் காடுகளின் ராட்சச மரங்களோதான் பலரது நினைவுக்கு வரும். ஆனால் உலகம் கவனிக்காத ஓர் இயற்கை அதிசயம், இந்தியக் கடலுக்கு அடியில் அமைதியாக உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது.
கடலில் இறங்கிய விஞ்ஞானிகள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பிறந்து இன்று வரை உயிர்ப்புடன் இருக்கும் பவளப் பாறையை நேரில் கண்டு பிரமிப்படைந்துள்ளனர். இது உலகிலேயே மிகப் பெரிய வாழும் பவளப்பாறை காலனியாகக் கருதப்படுகிறது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்திருப்பது இந்தியாவின் அழகிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் உள்ள கத்மத் (Kadmat) தீவுக்கு அருகில். இயற்கை எழில் கொஞ்சும் இந்தத் தீவின் ஆழமற்ற பவளக்கடல் பகுதி, கடல்சார் ஆய்வாளர்களின் சொர்க்கமாகப் பார்க்கப்படுகிறது.
















Add Comment