தென் அமெரிக்காவின் தலை உச்சியில் உள்ள நாடு கொலம்பியா. ஒருகாலத்தில் பாப்லோ எஸ்கோபார், தற்காலத்தில் ஷகிரா. இவர்கள் இருவரைத் தவிர வேறெந்த விஷயத்துக்கும் இது உலகப் புகழ் பெற்றதில்லை. ஆனால் ஜூன் 21 அன்று நடைபெற்ற இந்நாட்டு அதிபர் தேர்தல் தற்போது உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதில் சுவாரசியம் என்னவென்றால், மூன்று வாரங்களாக இந்தத் தேர்தல் தொடர்கிறது. ஒரு தேர்தல் இவ்வளவு நாட்கள் நீள்கிறதா என்பது எதார்த்தமான கேள்வியே! கடந்த மே 31 அன்று கொலம்பியாவின் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அந்நாட்டின் விதிமுறைப்படி, போட்டியிடும் வேட்பாளர்கள் ஐம்பது சதவீத வாக்குகளை எடுத்திருந்தால் மட்டுமே ஆட்சி செய்யத் தகுதி பெறமுடியும். இதனால் ஒரு கட்சி நாற்பத்து மூன்று சதவீத வாக்கு எடுத்தும் வெற்றி பெற முடியவில்லை.
அதனால் ஜூன் 21 அன்று இரண்டாவது முறை தேர்தல் நடைபெற்றது. சென்ற தேர்தலில் வாக்கு விகிதத்தில் முதல் இரண்டு இடத்தைப் பிடித்த கட்சிகளுக்குள் மட்டுமே இம்முறை தேர்தல் நடைபெற்றது. அதில் யார் ஐம்பது சதவீதத்துக்கு மேல் வாக்கு பெறுகிறார்களோ அவர்களே ஆட்சியைப் பிடிக்க முடியும். இந்த இரண்டாம் தேர்தலை ‘ரன் ஆஃப் தேர்தல்’ என்கிறார்கள். கொலம்பியாவின் வரலாற்றில் ரன் ஆஃப் தேர்தல் என்பது வழக்கமானதே.
















Add Comment