Home » மகராசன்
மெட்ரோ கதைகள்

மகராசன்

மழை நாள்களில் மெட்ரோ ரயில் பயணம் ஒரு வரம்தான். ஜன்னல் வழியாக சாரல் அடிக்காது. சட்டை நனையாது. ஓட்டைப் பேருந்துகள்போல உள்ளே ஒழுகாது. ஏசி குழாயிலிருந்து எப்போதாவது தண்ணீர் சொட்டும் என்பது வேறு விஷயம்.

ஆனால் நனைந்தவர்கள் மழையின் ஈரத்தை உள்ளே கொண்டு செல்வதைத் தவிர்க்க முடியாது. எல்லா நிலையங்களிலும், நடைமேடைகளிலும் வழுக்கும் டைல்ஸ் தரைதான். வழுக்கிவிடக்கூடாது என்பதற்காகத் துப்புரவுப் பணியாளர்கள் துடைத்துக் கொண்டே இருப்பார்கள்.

ரயில் பெட்டிகளுக்கு உள்ளேயும் நசநசவென ஆகிவிடும். நனைந்த உடைகளைப் பொருட்படுத்தாமல் இருக்கையில் உட்கார்ந்து விடுபவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இறங்கிய பின்பு அந்த இடத்தைப் பை வைப்பதற்குக் கூடப் பயன்படுத்த முடியாது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!