Home » பிணக்கா? கணக்கா?
நம் குரல்

பிணக்கா? கணக்கா?

அண்ணாமலை

தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகியிருக்கிறார். அவர் புதிய கட்சியோ, மக்கள் இயக்கமோ தொடங்கக்கூடும் என்று வெளிவரும் செய்திகள் தமிழக அரசியல் களத்தை மேலும் விறுவிறுப்பாக்கியுள்ளன.

கர்நாடக மாநிலப் பிரிவு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, அரசியலில் இணைவதற்காகத் தன் பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர் 2020ஆம் ஆண்டு டெல்லியில் பாஜக தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

கட்சியில் இணைந்தது முதலே அவரது தடாலடிப் பேச்சுகள், அதிரடி அணுகுமுறைகளால் பெரிதும் கவனிக்கப்பட்டார். இதையடுத்து அடுத்த ஆண்டே அவர் பாஜகவின் தமிழகப் பிரிவுக்குத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

கட்சித் தலைவரானதிலிருந்து பாஜகவைத் தனித்த சக்தியாகக் காட்டும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டார் அண்ணாமலை. இது அவருக்கு முன்பிருந்த மற்ற தமிழக பாஜக தலைவர்களின் அணுகுமுறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!