மனித உணர்வுகள் பற்றிய ஆய்வுகள் எப்போதும் இருந்து வருபவையே. அதில் சிலவற்றை மட்டும் சௌகரியமாக ஒவ்வொரு முறையும் தள்ளிவைத்து விடுகிறோம், அதிலும் பெண்கள் சார்ந்த விஷயங்களை ‘ஹார்மோன் கோளாறுகள்’ என்று எளிதாகக் கடந்து விடுவோம்.
வீடுகளில், அலுவலகங்களில்தான் உரத்த குரலில் பேசத் தொடங்கி, வார்த்தை வராமல் கண்ணீருடன் தடுமாறி நிற்கும் பெண்களைப் பார்த்திருப்போம். பெண்கள் என்றில்லை, பலருக்கும் கோபம் ஒருகட்டத்தில் அழுகையாக மாறுவதுண்டு. எதனால் அப்படி ஆகிறது, அந்தச் சூழ்நிலையில் நம் உள்ளே என்னவெல்லாம் நடக்கிறது என்பதை உளவியல் ரீதியாகவும், உயிரியல் ரீதியாகவும் மருத்துவர்கள் ஆய்வு செய்திருக்கின்றனர்.
நாம் தவறு என்று நினைக்கும் ஒன்று கண் முன் நடப்பது, நம் பேச்சு திரித்துச் சொல்லப்படுவது, நம் யோசனைகள் ஏற்கப்படாமல் போவது என்று கோபத்தை உண்டாக்கும் நிகழ்வுகள் எங்கும் யாருக்கும் நடக்கக்கூடியவைதான். ஒரு நிமிடம் நாம் கோபமாக, கத்தி ரகளை செய்வதற்குத் தயாராக இருந்திருப்போம். அடுத்த நொடி நம்மையே அறியாமல் கண்ணீருடன் பலவீனமாக மாறியிருப்போம். தைரியத்தை வெளிப்படுத்த நினைத்தபோது அழுகை வந்து, நாம் சோகத்தில் இருப்பதாக மற்றவர்களை நம்பவைத்து விடும். உண்மையில் இந்த வேலைகளை யார் பார்ப்பது, உடலின் எந்தச் சுரப்பிகள் இதற்குக் காரணம்?















Add Comment