மெட்ராஸ் பேப்பர் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா, சென்னை அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. கோடை வெயில் கால ஞாயிற்றுக் கிழமையாக இருந்த போதிலும் அரங்கு நிறை விழாவாக நடந்தேறியது.
அறிவித்திருந்தது போல் சரியாகக் காலை 9.30 மணிக்கு விழா தொடங்கிவிட்டது. ஜீரோ டிகிரி நிறுவனத்தின் பதிப்பாளர் ராம்ஜி, எழுத்தாளர்கள் சுஜாதா, சொக்கன், ச.ந.கண்ணன், மருதன், முகில், முத்துக்குமார் ஆகியோர் விருந்தினர்களாக வந்திருந்தனர்.
‘வாசிக்கும் வழக்கம் அருகி வருவதாகத் தொடர்ந்து பேசப்பட்டு வரும் காலகட்டத்தில் மெட்ராஸ் பேப்பர் தொடங்கப்பட்டது. வண்ணப் படங்கள், அதிரடிச் செய்திகள், அக்கப்போர் எனப் பரபரப்புச் செய்திகள் எதுவும் மெட்ராஸ் பேப்பரில் கிடையாது. ஆனாலும் அறிவுத் தேடலில் ஆர்வமுள்ள வாசகர்கள் தேடி வந்தனர்’ என முதலில் வாசகர்களுக்கு நன்றி கூறி விழாவைத் தொடங்கி வைத்தார் நஸீமா ரஸாக்.
தொடர்ந்து மெட்ராஸ் பேப்பரின் அறிமுக எழுத்தாளர்கள் நான்கு பேரின் புத்தகங்கள் வெளியிடப்பட்டன.















Add Comment