எவரெஸ்ட் சிகரத்தை நான்காவது முறையாகத் தொடுகிற பயணத்தில், நேபாளத்தைச் சேர்ந்த பிஜய் கிமிரே மரணமடைந்திருக்கிறார். மலையேறும் வீரர்கள் மற்றும் அதில் ஆர்வமுடையோர் மத்தியில் இச்செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுவரை ஏழாயிரத்து ஐந்நூற்றுக்கும் அதிகமானவர்கள் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து சாதனை நிகழ்த்தியிருக்கின்றனர். அந்த முயற்சியில் பல உயிரிழப்புகள் நடந்திருக்கின்றன. ஆனால் முன்னெப்போதும் இல்லாத அளவு, பிஜய் கிமிரேவின் மரணம் ஏன் இப்படியான தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது? அதற்கு பிஜய் கடந்து வந்த பாதையைக் கவனிப்பது அவசியம்.
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த, நேபாளத்தைச் சேர்ந்த முதல் தலித் வீரர் பிஜய் கிமிரே தான். 1991ஆம் ஆண்டு நேபாளத்தில் சோலுகும்பு பகுதியில் பிறந்தவர். அவர் பிறந்த பிஸ்வகர்மா சமுதாயம், நேபாளத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயங்களில் ஒன்று. அச்சாதியைச் சேர்ந்த பெரும்பான்மையானவர்கள் இரும்புக் கொல்லர் வேலை செய்பவர்கள். நாட்டின் மக்கள்தொகையில் பதின்மூன்று சதவீதம் இருந்தாலும், அச்சமுதாயம் கடுமையான ஒடுக்குமுறைகளைச் சந்தித்திருக்கிறது.
















Add Comment