Home » சென்னையின் தாகம்
தமிழ்நாடு

சென்னையின் தாகம்

தண்ணீரில் கண்டம் என்று ஜோசியத்தில் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். 2015இல் வெள்ளமென்றால் 2019இல் வறட்சி என்று நான்கு வருடங்களுக்கு ஒருமுறை சென்னையை நீர் சுழற்றி அடிப்பதைப் பார்த்தால் இந்நகரத்தின் ஜாதகத்தில் நீரினால் தோஷம் இருக்குமோ என்று சந்தேகம் ஏற்படுகிறது.

சென்னை நகரம் சமதளமாக இருப்பதாலும், நிரந்தரமான நதிகள் இல்லாததாலும், ஒரு பருவமழை பொய்த்தாலும் நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் அபாயத்தில்தான் சென்னை இருக்கிறது. இந்த நகரத்தின் நீர் மேலாண்மை பற்றி தகவல்கள் வெவ்வேறு இடங்களில் பரவிக் கிடக்கின்றன. அவை ஓரிடத்தில் ஒருங்கிணைக்கப்பட்டால்தான் திட்டமிடவும், நீர் மேலாண்மை செய்யவும், வருவதை முன்கூட்டிய அனுமானிக்கவும் முடியும்.

இப்படியொரு நிகழ்காலத் தினத் தரவுகளை மாநிலம் முழுவதற்கும் வெளியிட்ட முதல் மாநிலம் ஆந்திரப் பிரதேசம்தான். அங்கு அரசாங்கம் செய்து முடித்த இந்தப் பணியை சென்னையில் சுந்தரேசன் சந்திரன் என்ற தரவு விஞ்ஞானி (data scientist ) தனது சிட்டிசன் ஆக்ஷன் குரூப் (Citizen Action Group) என்ற அமைப்பின் மூலம் தனிநபராகச் செய்திருக்கிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!