Home » சக்கரம் – 72
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 72

72 உனா

 

பஞ்சாப்பின் பகலே  டிசம்பர் மாத மெட்ராஸ் இரவைப்போல இருந்தது என்றால் இரவு ஏற ஏற அனந்த்பூர் ஸாகிப், அறைக்குள் கூட குளிரிற்று.

அணிந்திருந்த பாரத் ஜோடோ பனியனுக்கு மேல், ஆபீஸில் சொன்னார்கள் என்று, சூளைமேடு ஹைரோடில் இருந்த போலீஸ்  சீருடைப் பொருட்கள் விற்கும் எம் வி ராமலிங்கம் அண்ட் கோவில் வாங்கிய காக்கி ஸ்வெட்டரையும் மீறிக் குளிரிற்று. முழங்கை முட்டிக்கெல்லாம் ராணுவ ஸ்வெட்டரைப்போல தோல் கொடுத்திருக்கிறானே; தடியாக இருக்கிறதே என்று பூரித்துப்போய் வாங்கியது. வீட்டில் போட்டுப் பார்த்தபோது புழுங்கிற்று. பள்ளிக்குப் பின் இந்திய மேப்பையே பார்க்க வாய்த்திராதவன் வடநாட்டுக் குளிருக்கு இது போதும் என்று இவனாகவே நினைத்துக்கொண்டு இருந்துவிட்டான். வரும்வரை சண்டிகரையே பஞ்சாப் என்று நினைத்திருந்தவன் என்பது வேறு விஷயம். அனந்த்பூர் ஸாகிப்தான் பஞ்சாப்பில் முதல் நாள்தான். இதற்கே இப்படி இருக்கிறதே பஞ்சாப்பைத் தாண்டினால் குளிர் எப்படி இருக்கும் என்று, ஒரே நேரத்தில் குஷியாகவும் தாங்கமுடியுமா என்று பயமாகவும் இருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!