பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆனைமங்கலச் செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியா கொண்டுவரப்பட உள்ளன. இந்தச் செப்பேடுகளில் என்ன சொல்லப்பட்டுள்ளன? அவை ஏன் நெதர்லாந்துக்குச் சென்றன?
சோழர் காலத்தில் முக்கியமான ஆவணங்கள் செப்பு உலோகத் தகடுகளில் எழுதி வைக்கப்பட்டன. அவையும் கல்வெட்டுகளைப் போலவே செப்பும் நீண்ட காலம் அழியாமல் நிலைக்கும் என்பதே காரணம். ஓலைச்சுவடிகள் தீ, ஈரம், பூச்சிகளால் அழிந்துவிடும் அபாயம் இருந்தது. ஆகவே இப்படி ஓர் உபாயம் செய்து வைத்தனர்.
அரசர்கள் கோவில்களுக்கோ, சேவை செய்தவர்களுக்கோ நிலங்கள் வழங்கும்போது அதைச் செப்பேட்டில் எழுதி வழங்கினர். அது உரிமை ஆவணமாகச் செயல்பட்டது. அது அரசின் அதிகாரத்தை நிலைநாட்டும் சடங்கு. அரச முத்திரை பதிக்கப்பட்டே இறுதி செய்யப்படும். ஆகவே அதைப் போலியாக உருவாக்குவது கடினம்.















Add Comment