Home » யார் அந்த சிகை கொற்றன்?
வரலாறு

யார் அந்த சிகை கொற்றன்?

எகிப்தின் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழி (தமிழ் பிராமி) கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவின் கடல்சார் வரலாற்றையே மீண்டும் மாற்றி எழுதும் வல்லமை கொண்டது இந்தக் கண்டுபிடிப்பு என்று கல்வெட்டு ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இது பண்டைய தமிழக நாகரிகத்தின் உலகளாவிய தாக்கத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.

சுவிட்சர்லாந்தின் லாசேன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் இங்கோ ஸ்ட்ராச் (Ingo Strauch), பாரீஸில் உள்ள ஃபிரான்ஸ் ஆசியக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் ஷார்லட் ஸ்மிட் (Prof. Charlotte Schmid) ஆகியோர் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்த வியக்கத்தக்கக் கண்டுபிடிப்பு வெளிவந்துள்ளது. பிப்ரவரி 11, 2026 அன்று சென்னையில் நடைபெற்ற நான்கு நாள் சர்வதேசத் தமிழ் கல்வெட்டியல் மாநாட்டின் தொடக்க அமர்வில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

மன்னர்களின் பள்ளத்தாக்கு (Valley of Kings) என்பது எகிப்தில், நைல் நதியின் மேற்குக் கரையில் பண்டைய தீப்ஸ் நகருக்கு (இன்றைய லக்ஸர்) அருகில் உள்ள ஒரு பாலைவனப் பள்ளத்தாக்கு. இங்குதான் புதியகாலப் பேரரசில் பாரோக்களின் கல்லறைகள் அமைக்கப்பட்டன. பிரமிடுகள் கொள்ளையர்களால் சூறையாடப்பட்டதால், பாரோக்கள் தங்கள் கல்லறைகளை இந்த மறைவான பள்ளத்தாக்கில் பாறைகளுக்குள் வெட்டி அமைத்தனர்.

பண்டைய எகிப்தில் பாரோ (Pharaoh) என்பது எகிப்தின் அரசரைக் குறிக்கும் பட்டப்பெயர். இந்தச் சொல் எகிப்திய மொழியில் ‘per-aa’ என்பதிலிருந்து வந்தது, இதன் பொருள் ‘பெரிய வீடு’ அல்லது ‘அரண்மனை’ என்பதாகும். காலப்போக்கில் இது அரண்மனையில் வாழும் அரசரைக் குறிக்கும் பட்டமாக மாறியது. பாரோக்கள் வெறும் அரசர்கள் மட்டுமல்ல – அவர்கள் கடவுள் மனிதர்களாகக் கருதப்பட்டனர். எகிப்தியர்கள் பாரோவை பூமியில் வாழும் கடவுளான ஹோரஸின் (Horus) உருவமாகவும், இறந்த பின் ஒசைரிஸாக (Osairis) மாறுபவராகவும் நம்பினர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!