எப்படிச் சொல்லப்பட்டது?
நாம் என்ன சொல்கிறோம் என்பதைவிட, அதை எப்படிச் சொல்கிறோம் என்பதற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. உதாரணத்துக்கு, ஒரே நிறுவனத்தின் இரண்டு விற்பனைப் பிரதிநிதிகளை எடுத்துக்கொள்வோம். இருவரும் ஒரே நேரத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்கள். ஒரே கல்வி மையத்தில் எம்பிஏ படித்தவர்கள். நிறுவனத்திலிருந்து ஒரே நேரத்தில் ஒரே கால அளவுக்கு ஒரே அதிகாரியால் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிக் கையேட்டை இருவருமே வரிவரியாகப் படித்துத் தெளிந்தவர்கள்.
ஆனாலும், நிறுவனத்துக்கு அவர்கள் கொண்டுவரும் விற்பனையின் அளவு நிச்சயம் ஒன்றாக இருக்காது அல்லவா? ஏனென்றால் அவர்கள் எப்படிச் செய்கிறார்கள் என்பதே இங்கு அவர்களுடைய திறமையைத் தீர்மானிக்கிறது. அது போலவே, இரண்டு பேர் ஒரே வார்த்தைகளைப் பேசினாலும் அவை முற்றிலும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுக்கக் கூடும்.
ஒரு வாக்கியத்தில், வெவ்வேறு வார்த்தைகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அந்த வாக்கியத்துக்கு வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுக்கவல்லது.
உதாரணத்துக்குப் பின்வரும் வாக்கியத்தை எடுத்துக் கொள்வோம்.
‘குருவும் தீபிகாவும் லவ் பண்றாங்கன்னு மீனா சொல்றா!’
















Add Comment