மதிய உணவு முடித்து வேலை மும்முரத்தில் இருந்தபோது, தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. யாராவது கடன்காரனாக இருக்கும் என்று நினைத்து, அதைத் துண்டித்துவிட்டு வேலையைத் தொடர்ந்தேன்.
மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு. யாராக இருக்கும் என்றெண்ணி சற்று எரிச்சலோடு ‘ஹலோ’ என்றேன். யாரோ இந்தியில் பேசுகிறார்கள் என்பது மட்டும் புரிந்தது. புரியாமல் மீண்டும் உரக்க ‘ஹலோ’ என்றேன். ‘அப்துல் ரசாக்’ என்ற பெயர் மட்டும் புரிந்தது.
‘யாருங்க நீங்க? யார் வேணும்?’
‘அப்துல், அப்துல் ரசாக், கரைகுடி’ என்று அரைகுறைத் தமிழ் அந்தப் பக்கத்திலிருந்து கேட்டது.
சட்டென அதிர்ச்சி உறைத்து ‘வாப்பா’ என்று முணுமுணுத்தேன். எனக்கே அது சரியாகக் கேட்கவில்லை.
அதற்குள் யாரோ ஒருவர் அந்தப் பக்கமிருந்து தமிழில் பேசத் தொடங்கினார்.















Add Comment