Home » யாருடைய தோல்வி?
கிச்சன் கேபினட்

யாருடைய தோல்வி?

மேரி ஆன் டாட்

 மேரி ஆன் டாட்

அமெரிக்காவின் தெற்குப் பக்கத்தில் உள்ளது கென்டக்கி மாகாணம். அங்கே இருக்கும் லெக்சிங்டன் நகரில் 1818ஆம் ஆண்டு பிறந்தார் மேரி ஆன் டாட். தந்தை ராபர்ட் ஸ்மித் டாட் வங்கிப் பணியாளர், வர்த்தகர். ‘Athens of the West’ என்று அழைக்கப்பட்ட லெக்சிங்டனின் செல்வாக்குமிக்க குடும்பம் அது. ஏழு குழந்தைகளில் நான்காமவர் மேரி.

மேரிக்கு ஆறு வயதாகும் முன்னரே பேறுகாலத்தின்போது அவருடைய அம்மா எலிஸா பார்க்கர் டாட் உயிரிழந்தார். அந்த இழப்பு ஆழமான ஒன்று. பின்னர் தந்தை மறுமணம் செய்தார். மேரி தனது சிறு வயதை மிகத் தனிமையான ஒன்று என நினைவுகூர்ந்தார். சிற்றன்னை தன்னை சாத்தானின் கரம் என்றுகூட அழைத்தாள் என்றார்.

ஆனால் அந்த வலியை மேரி புத்தகங்களில் புதைத்தார். Shelby Female Academyஇல் ஆறு ஆண்டுகள், பின் மேடம் Charlotte Mentelle ஃபிரெஞ்சு பள்ளியில் நான்கு ஆண்டுகள் என மொத்தம் பத்து ஆண்டுகள் கல்வி பயின்றார். அந்தக் காலத்தில் பெண்களுக்கு அது அரிது. மேரி சரளமாக ஃபிரெஞ்சு பேசினார், அரசியலை ஆழமாக அறிந்திருந்தார். மூன்று முறை அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக நின்ற ஹென்றி கிளேயுடனான உரையாடல் மேரியின் வீட்டில் நடைபெறும். மேரி அந்தக் கூட்டங்களை ஆர்வத்துடன் கவனித்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!