Home » அணுகுமுறையை மாற்றுங்கள்!
சட்டம்

அணுகுமுறையை மாற்றுங்கள்!

கடந்த மார்ச் 13ஆம் தேதி மக்களவையில் திருநர் உரிமைகள் திருத்தச் சட்ட மசோதாவை (2026) மத்திய அரசு தாக்கல் செய்தது. இதில் உள்ள சில அம்சங்கள் திருநர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி எதிர்ப்புகள் கிளம்பியிருந்த நிலையிலும், இம்மசோதாவுக்கு மார்ச் 25 அன்று மாநிலங்களவை ஒப்புதல் அளித்துள்ளது. அப்படி இந்த மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் என்னென்ன? விரிவாகப் பார்க்கலாம்.

முதலில் பால் (Sex) மற்றும் பாலினம் (Gender) பற்றிப் புரிந்துகொள்வது அவசியம். பால் என்பது பிறப்புறுப்பு மற்றும் குரோமோசோம் அடிப்படையிலான உடற்கூறுகளால் அடையாளப்படுத்தப்படுகிறது. சமூக ரீதியாக, கலாசார ரீதியாக, மன ரீதியாக நாம் தேர்ந்தெடுக்கும் அடையாளத்தைப் பாலினம் என்கிறோம்.

இவ்வகையிலிருந்து வேறுபட்டு, பிறக்கும்போதே ஆண் அல்லது பெண் என்ற தெளிவில்லாமல் அல்லது இருபாலருக்கும் உரிய இருவேறுபட்ட பிறப்புறுப்புகளுடன் பிறக்கும் குழந்தைகள் இடையிலிங்க (Intersex) குழந்தைகள் எனப்படுவார்கள். மாற்றுப் பாலினத்தவர்களில் திருநங்கை (Trans woman – ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்) பற்றி ஓரளவு தெரிந்திருக்கும் நமக்கு, திருநம்பிகளை (Trans man – பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்கள்) பற்றி பெரிதாகத் தெரிவதில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!