வரும் ஜூலை நான்காம் தேதி அமெரிக்காவின் இருநூற்று ஐம்பதாவது பிறந்தநாள். அதைக் கோலாகலமாகக் கொண்டாடும் வகையில் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது டிரம்ப் அரசாங்கம். அவற்றுள் முக்கியமான ஒன்று, சிறப்பு நாணயங்கள் வெளியீட்டுத் திட்டம்.
அமெரிக்க வரலாற்றின் சில இன்றியமையா நிகழ்வுகளையும் அதிபர்களையும் நினைவுகூரும் வகையில் ஏற்கெனவே புது நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புகழ்பெற்ற அதிபர்களான ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெஃபர்சன், ஜேம்ஸ் மேடிஸன், ஆபிரஹாம் லிங்கன் ஆகியோருடன் தொடர்புடைய நிகழ்வுகளுடன், தனித்தனியே ‘quarter’ எனப்படும் 25 செண்ட் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இப்போது கூடுதலாக இன்னும் இரண்டு சிறப்பு நாணயங்கள் வெளிவர இருக்கின்றன.















Add Comment