மகளிர்ப் பெட்டியில் பயணம் செய்பவர்கள் மூன்று வகை. பயிற்சி வகுப்புகள், கல்லூரிக்குப் போகும் இளம்பெண்கள். குழுவாக வருபவர்கள் தங்களுக்குள் சிரித்துப் பேசிக் கொள்வார்கள். மற்றவர்கள் கட்டாயமாகக் காதணிப் பொறியைச் சொருகிக் கொண்டிருப்பார்கள்.
வயதானவர்கள் குறைந்தபட்சம் ஒரு துணையுடன் வருவார்கள். முற்றிலும் மௌனமாகவோ, இல்லை உடல் உபாதைகள் குறித்துப் பொதுவாகப் பேசிக் கொண்டோ இருப்பார்கள். இடைப்பட்ட வயதுகளில் இருப்பவர்கள்தான் பெரும்பான்மை.
உயர்நீதிமன்றம், தலைமைச் செயலகம், கஸ்டம்ஸ், வங்கி, எல்ஐசி என ஏதேனும் ஓர் அரசு அமைப்பில் வேலை பார்ப்பவர்கள். அலுவலக வம்புகள், வீட்டு வேலைகள், பிள்ளைகளுடைய பிடிவாதம், அவர்களுக்குச் செல்லம் கொடுத்துக் கொம்பு சீவி விடும் பெரியவர்கள், சொல்லாமல் கொள்ளாமல் மட்டம் போடும் வேலைக்காரப் பெண்கள் என அவர்கள் பேசிக் கொள்வதற்கு ஏராளமான பொது விஷயங்கள் இருக்கும்.















Add Comment