மெட்ரோ ரயில்கள் தனியான உலகத்தில் இயங்குபவை. அங்கே குப்பைத் தொட்டிகள் கூட ஸ்டிக்கர் பிரிக்காத சம்புடம் போலப் பளபளக்கும். கத்திரி வெயில் எரித்துக் கொண்டிருக்கும்போதும் பனி வீடு மாதிரி குளிரும். ரயில்கள் குறித்த இடத்தை குறித்த கணத்தில் சென்றடையும்.
ஆனால் ஆனைக்கும் அடி சறுக்கும், ஆட்டோ கரெக்ட்டும் அர்த்தம் கெட்டுத் திருத்தும் என்பது போல, மெட்ரோ ரயிலும் தன் பீடத்தில் இருந்து ஒரு நாள் இறங்கி வந்தது. தானும், சக்கரமும் இரும்பும் கொண்ட சாதாரணப் பெட்டிதான் என்று நிரூபித்தது.
மெட்ரோ ரயில்கள் தானியங்கிக் கதவுகள் கொண்டவை. கதவு திறந்த சில நொடிகளில் உள்ளே புகுந்துவிட வேண்டும். கடைசியாக ஏறினோம் என்றால், உள்ளே காலடி எடுத்து வைத்த கணமே முதுகுப் பையைக் கவ்விப் பிடிப்பதுபோலக் கதவுகள் மூடிக் கொள்ளும்.
ஒருநாள் காலை அதேபோல மூடிய கதவுகள், இரண்டு விநாடிகளில் மீண்டும் திறந்து கொண்டன. ரயில் கிளம்பி விட்டது எனப் படிகளில் மெத்தனமாக இறங்கி வந்தவர்கள்கூட ஏறிக் கொண்டனர். எல்லோரும் ஏறிய பிறகு நிதானமாகக் கதவுகள் மூடின. ஆனால் அப்போதும் ரயில் நகரவில்லை.















Add Comment