மெட்ரோவுடைய சிறப்பம்சங்களில் ஒன்று, சுத்தம். பளிச்சிடும் தரை, துப்புரவான இருக்கைகள், தூய்மையான காற்று. இவை எல்லாம் கறார் விதிமுறைகளாலும் கண்காணிப்பாலும் பேணப்படுபவை.
கண்காணிப்பு வளையத்துக்குள் அடங்காமல் அவ்வப்போது சில விதிமீறல்கள் நிகழும். அரிதாக அவற்றால் சில நன்மைகளும் விளையும்.
ஒரு அலுவலகக் காலை. மெட்ரோவுடைய ஏசி உறைக்காத வண்ணம் கூட்டம் அதிகம் இருந்தது. நாலிதழ் தூணைச் சுற்றி ஏழெட்டு பேர் நின்றிருந்தோம். அதில் டீஷர்ட், டிராக் பேண்ட் அணிந்த ஒரு சிறுமியும் அடக்கம். ஐந்தாவது அல்லது ஆறாவது படிப்பவளாக இருக்கலாம். பக்கவாட்டில் தண்ணீர் போத்தல் சொருகிய முதுகுப் பையுடன் டேக்வாண்டோ, யோகா என ஏதோ ஒரு பயிற்சி வகுப்புக்குச் சென்று வந்தவளாகத் தோன்றினாள். முதுகை வளைத்து இரண்டு கம்பிகளுக்கு இடையில் முகத்தை நுழைத்துச் சாய்ந்திருந்தாள்.















Add Comment