முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2026-27ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட், கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்டது. நிதியமைச்சர் மரிய வில்சன் சமர்ப்பித்த இந்த அறிக்கையில் அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, தகுதியுள்ள ஏழைப் பெண்களின் திருமண நாளில் அவர்களுக்கு அரசின் சார்பில் எட்டு கிராம் தங்கமும் ஒரு பட்டுச் சேலையும் வழங்கப்படவுள்ளன. இதற்கு அண்ணன் சீர் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது தவிர, இவ்வாண்டு பிளஸ்-1 பயிலும் சுமார் ஐந்தேகால் லட்சம் பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட், குடிநீர் பாட்டில் வைக்கும் வசதியுடன் நவீன சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. பள்ளிகளில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்கான இலவசத் தொலைபேசி எண்ணும், புகார் செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.















Add Comment