தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை ஒரு நடிகையோடு தொடர்புபடுத்தி அவதூறாகப் பேசிய வழக்கில் திமுகவின் இளைஞரணிச் செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று தஞ்சாவூரில் காவிரிப் பிரச்சனை தொடர்பாகத் தமிழக அரசைக் கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய உதயநிதி முதலமைச்சர் விஜய் குறித்தும், அவரோடு ஒரு நடிகையைத் தொடர்புபடுத்தியும் அவதூறாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தவெகவினரும் மற்றும் பல அரசியல் கட்சியினரும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று உதயநிதி ஸ்டாலின் மீது அவதூறுப் பேச்சு, பெண்களின் மாண்பைக் குலைத்தல் உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டார்.
உதயநிதி கைது நடவடிக்கைக்கு திமுகவின் முக்கியத் தலைவர்களும், அதிமுக உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கைதை எதிர்த்துத் தமிழகத்தில் திமுகவினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
















நம் குரல் தி.மு.க தன் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுத்
தங்களை மக்கள் மனதில் இடம்பெற என்ன செய்ய வேண்டுமோ
அதை விடுத்து அவசியமற்றப் பேச்சுக்களை முற்றிலும் தவிர்க்க
வேண்டும். யாகாவாராயினும் நா காக்க வேண்டும். முதிர்ச்சியும்
அனுபவமின்மையும் உதயநிதிக்கு இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம் நம் குரல் ஆளுங்கட்சியின் வன்மத்தைச் சுட்டிக்காட்டத்
தவறவிட்டு விட்டதாகத் தெரிகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருக்கும் முதல் நாள் கைதுக்கு இவ்வளவு அவசரம் ஏன் ?
தஞ்சாவூர் அழைத்துச் சென்று செங்கிப்பட்டியில் விசாரணை செய்த போது அதை நீலாங்கரையிலே செய்திருக்கலாமே. இவ்வளவுக்கும் ரிமாண்ட் கேட்க மாட்டோம் என்று நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தது.
நீதி மன்றம் கூட காணொலி வாயிலாக விசாரிக்கும் காலம்.
தி.மு.க சுயபரிசோதனை செய்து தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.