பாலஸ்தீனத்தில் இன்று நடக்கும் போரைத் தொடங்கியது ஹமாஸ்தான். அதில் ஐயமில்லை. ஆனால் திட்டமிட்டுத்தான் ஹமாஸை ஆரம்பிக்கவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு இஸ்ரேலின் நடவடிக்கைகள் மிகுந்த அச்சமூட்டுகின்றன. காஸா பிராந்தியமே கிட்டத்தட்ட துடைத்துவிடப்பட்டாற்போல ஆகிவிட்டது.
மருத்துவமனைகள், குடியிருப்புகள், கல்வி நிலையங்கள், வர்த்தக மையங்கள், வழிபாட்டுத் தலங்கள் எதையும் விட்டு வைக்காமல் மொத்தமாகக் குண்டு போட்டு ஒழித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள், வயதானவர்கள், நடமாட முடிந்தவர்கள்-முடியாதவர்கள் என்ற பேதமே கிடையாது. இன ஒழிப்பு என்பதன் இருபத்தோறாம் நூற்றாண்டு வடிவம் எப்படி இருக்கும் என்பதை உலகம் தெள்ளத் தெளிவாக இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறது.















Add Comment