Home » கூட்டமில்லாத் திருவிழா
புத்தகக் காட்சி

கூட்டமில்லாத் திருவிழா

கோவை கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் ஜூலை 17ஆம் தேதி தொடங்கி புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. 2016ஆம் ஆண்டில் நூற்று ஐம்பது அரங்குகளுடன் ஆரம்பித்த கோவை புத்தகக் கண்காட்சி, இந்த வருடம் நானூற்று இருபது அரங்குகளாக விரிந்துள்ளது. பத்து நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் பதிப்பகங்களின் அரங்குகள் மட்டும் இருநூறுக்கு மேல் இருக்கின்றன.

இவற்றில் ஜீரோ டிகிரி, காலச்சுவடு, கிழக்கு, உயிர்மை, தேசாந்திரி, நக்கீரன், விகடன், தமிழினி, எதிர் வெளியீடு, சிக்ஸ்த் சென்ஸ் போன்ற பதிப்பகங்களைக் குறிப்பிடலாம். இது போக, புத்தக விற்பனை அல்லாத பல்வேறு பொருட்கள் விற்கும் கடைகளும் பங்கேற்றிருந்தன.

கோவை என்னதான் பெரிய தொழில் நகரமாக இருந்தாலும், தமிழ்நாட்டில் நடைபெறும் புத்தகத் திருவிழாக்களில் சென்னைக்கு அடுத்து ஈரோடு மாவட்டமே முன்னணியில் உள்ளது. பதிப்பகத்தாரின் விற்பனை எதிர்பார்ப்பும் அங்குதான் அதிகம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!