Home » என்று மாறும் இந்த நிலை?
சமூகம்

என்று மாறும் இந்த நிலை?

ஐம்பது வருடங்களுக்கு முன் ‘முதலாளி’ என்றாலே ஆண்கள்தான். ‘முதலாளியம்மா’ உள்ளதே என்று கேட்காதீர்கள். அது முதலாளியின் வீட்டுக்காரம்மாவை குறிப்பதற்கு மட்டுமே. எவ்வளவு சிறிய நிறுவனமாக இருந்தாலும் சரி ஆண் வாரிசுதான் அவர்களுக்குப் பின் அதைப் பராமரிக்க வேண்டும். ஆசைக்குப் பெண்குழந்தை, ஆஸ்திக்கு ஆண்குழந்தை என்ற சொலவடையே உண்டு.

ஆனால் இன்று இந்த நிலை மெல்ல மாறத்தொடங்கியுள்ளது. பணம் மட்டுமல்லாமல் பதவியும் பெண் வாரிசுகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. அப்படித் தனக்கு அளிக்கப்பட்ட பதவியில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக்கொண்டிருக்கும் பெண்களைப் பற்றிய கட்டுரைதான் இது.

சில நாட்களாகவே தமிழகத்தில் வேறு ஒரு விஷயத்திற்காக அடிக்கடி பேசப்படும் காவியா மாறன், சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனின் மகள். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் B.Com, பின்னர் யூ.கேவில் வார்விக் பிசினஸ் ஸ்கூலில் MBA படித்துள்ளார். MBA முடிந்தவுடனேயே சன் டிவி நெட்வொர்க்கில் இணைந்தவர், கன்டெண்ட் பிரிவில் படிப்படியாக வளர்ந்து இயக்குநராக உயர்ந்துள்ளார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!