மீண்டும் கைது
தன் மீதான உரிமை மீறல் பிரச்சினைக்குப் பதிலளித்துப் பேசுகையில், தன்னைப் பழிவாங்குவது மட்டுமே ஜனதா அரசாங்கத்தின் ஒரே லட்சியம் என்று ஜனதா ஆட்சியாளர்களைப் போட்டுத் தாக்கினார் இந்திரா காந்தி.
இதற்கு முன்பு தன்னைக் கைது செய்த சமயத்தில் மாஜிஸ்டிரேட் நிபந்தனையின்றி விடுவித்தபோது, ‘மாஜிஸ்டிரேட் தவறு செய்துவிட்டார்’ என்று வெளிப்படையாகவே மொரார்ஜி தேசாய் கண்டித்ததை இந்திரா காந்தி சுட்டிக்காட்டினார்.
மேலும், இன்னமும் இந்திரா காந்தியைக் கைது செய்யாத ஆட்சியாளர்களை ஆண்மையற்றவர்கள் என மக்கள் குறிப்பிடுவதாக உள்துறை அமைச்சர் சரண் சிங் சொன்னதையும் மேற்கோள் காட்டினார்.
‘நாட்டின் மதச்சார்பற்ற தன்மையும், சோஷலிசக் கொள்கையும் கேள்விக்குள்ளாகிவிட்டன. நாட்டின் பல பகுதிகளில் மதக்கலவரங்களை அரசே தூண்டி விடுகிறது; பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இந்தியப் பொருளாதாரத்தைத் தாரை வார்த்துவிட்டீர்கள்’ என்று குற்றச்சாட்டுக்களை அடுக்கிக் கொண்டே போனார்.















Add Comment