Home » பனிப் புயல் – 44
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 44

ரத்தம் சிந்தாத போர்

2014 பிப்ரவரியில் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்பட்டது. ‘இதற்கு மேலும் கிரீமியாவைப் பற்றி முடிவெடுக்காமல் இருக்க முடியாது. அரசாங்கமின்றி உக்ரைன் குழப்பத்தில் தவிக்கிறது. இப்போதாவது கிரீமியாவைத் திரும்ப எடுத்துக் கொள்வோம்’ என்ற முடிவை அறிவித்தார் புதின். உக்ரைன் பிரதமர் யனுகோவிச் ஏற்கெனவே ரஷ்யாவில் தஞ்சமடைந்திருந்தார்.

பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷோய்கு தலைமையில் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு என்கிற வார்த்தைக்கு இடமில்லை. ஏனெனில் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் உக்ரைனுக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்ட தீபகற்பம் கிரீமியா. சோவியத் அதிபர் குருஷேவ் உக்ரைனின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ள எடுக்கப்பட்ட அரசியல் முடிவு.

போக்குவரத்து, தண்ணீர், மின்சாரம், அன்றாடப் பொருள்கள் அனைத்துக்கும் உக்ரைனையே சார்ந்திருந்தது கிரீமியா. அதனால் கிரீமியாவின் உள்கட்டமைப்பைக் கவனித்துக்கொள்ள அது உக்ரைனிடம் இருப்பதே சரி என்று முடிவானது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!