சாலையோரத்தில் சிதறிக்கிடக்கும் சிகரெட் துண்டுகளைப் பார்த்தால் பெரும்பாலோருக்கும் அருவருப்புதான் தோன்றும். அவற்றைப் பற்றி யாரும் இரண்டாவது முறை யோசிப்பதில்லை. ஆனால் அந்தச் சிறிய சிகரெட் துண்டுகள் ஒரு குழந்தையின் மென்மையான பொம்மையாகவும், ஒரு செடியின் உரமாகவும், நாம் எழுதும் காகிதமாகவும் மாற முடியும் என்றால்?
ஒருகாலத்தில் நச்சுக்கழிவாகப் பார்க்கப்பட்ட சிகரெட் ‘ஃபில்டர்கள்’ இன்று இந்தியாவின் ஒரு பகுதியில் வாழ்வாதாரத்தை உருவாக்கும் மூலப்பொருளாக உருவெடுத்துள்ளன. நம்ப முடியாத இந்த மாற்றத்தை இந்தியாவின் ஒரு இளம் தொழில்முனைவோர் நிறுவனம் நிஜமாக்கியுள்ளது.
பொதுவாக சிகரெட் குடிப்பவர்கள் கடைசிப் புகையை இழுத்துவிட்டு, இன்னும் கனன்று கொண்டிருக்கும் அந்தச் சிறிய துண்டைத் தரையில் வீசிவிடுவார்கள். அவர்கள் காலடியில் அது நசுங்கிவிடும். அடுத்த நொடியே அவர்கள் திரும்பிப் பார்க்காமல் நடந்து சென்றுவிடுவார்கள். ஆனால் நசுங்கிய துண்டு அங்கேயே முடிவதில்லை. அது மண்ணிலும் நீரிலும் நீண்டகாலம் கிடந்து சுற்றுச்சூழலில் நஞ்சைச் சேர்த்துக்கொண்டே இருக்கும்.















Add Comment