Home » கஞ்சாவும் கலைஞர்களும்: ஓர் ‘அதி முக்கிய’ ஆய்வு
சமூகம்

கஞ்சாவும் கலைஞர்களும்: ஓர் ‘அதி முக்கிய’ ஆய்வு

ஷேக்ஸ்பியர் தான் வாழ்ந்த காலத்தில் போதைப்பொருள் பயன்படுத்தினார் என்று ஓர் ஆய்வு முடிவு வந்திருக்கிறது. அவர் இறந்து நாநூறு ஆண்டுகள் கழித்து எப்படி இந்த ஆய்வு நடத்தப்பட்டது? அவர் வாழ்ந்த பதினாறாம் நூற்றாண்டில் கஞ்சா முதலிய போதைப்பொருள்கள் தடை செய்யப்பட்டிருந்தனவா? பொதுவாகவே கலைஞர்களுக்கே போதைப்பொருள்கள் கலையை உருவாக்கும் காரணியாக உதவியதா?

வில்லியம் ஷேக்ஸ்பியர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர். அவர் இங்கிலாந்தின் ஸ்ட்ராட்ஃபோர்ட் நகரில் பிறந்து வளர்ந்தவர். அவர் வாழ்ந்த வீடு இப்போது ஓர் அருங்காட்சியகமாக உள்ளது. இந்த அருங்காட்சியகத் தோட்டத்தில் மானுடவியல் ஆய்வாளர் தாக்கரே என்பவர் பல வருடங்களாக ஆய்வு நடத்தி வருகிறார். இந்த ஆய்வில்தான் மண்ணுக்குள் புதைந்திருந்த களிமண் குழல்கள் சிலவற்றைக் கண்டறிந்திருக்கிறார்கள். அந்தக் குழல்களில்தான் கஞ்சா, நிகோடின் முதலிய போதைப்பொருள்கள் இருந்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஃபிரான்சிஸ் தாக்கரே என்ற இந்த ஆய்வாளர் 1999இல் இருந்தே இந்தக் கருதுகோளையும் ஆய்வுகளையும் முன்னெடுத்து வருகிறார். ஷேக்ஸ்பியரைத் தொடரும் அறிஞர்கள் பலரும் இதனை மிகக்கடுமையாக எதிர்த்தார்கள். 2015ஆம் வருடம் அவருடைய ஆக்கங்களையும் தொழில்நுட்பத்தையும் முன்வைத்து புதிதாக ஓர் ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!