மே 2022 உதய்பூர் பிரகடனம். நவம்பர் 2022 தேர்தல் பணிக்குழு (task force) கூட்டம். கடந்த வாரம் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம். காங்கிரஸின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்குத் தெரியும், கட்சியில் மும்முரமாக வேலை நடக்கிறதென்று. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி கட்சியில்...
Tag - இந்தியா
மத்தியில் ஆளும் கட்சியல்லாத, அவர்களின் கூட்டணியிலும் இல்லாத பிற கட்சிகள் ஆட்சி செய்யும் பல மாநிலங்கள் இங்கே உண்டு. அவர்களைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசிற்கு ஆளுநர் பதவியைப் பயன்படுத்துவது வாடிக்கையாகியிருக்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் வெவ்வேறு கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் இருக்கும்போது ஆளுநரின்...
சந்திரனின் தென் துருவத்தைத் தொட்டாயிற்று. அந்தத் திக்திக் நிமிடங்களையும் அதனைத் தொடர்ந்த பரவசத்தையும் மானிட குலமாக நின்று அனுபவித்தாயிற்று. அடுத்தது என்ன..? தரையிறங்கிய விக்ரம் இப்போது என்ன செய்கிறது? பயணத்தின் நோக்கம் நிறைவேறியதா? ஆகிய கேள்விகளுக்குப் பதில் தேடி விடுவோம். இந்த சவாரியின் தலையாய...
நிலவின் தென்துருவத்தில் உறைந்த பனி இருக்கிறது. அந்தப் பனியைத் தொட்டு விடுவது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சித் துறையில் மிகப்பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. நமது சந்திரயான் அந்தப் புனித காரியத்துக்காகப் புறப்பட்டுப் போயிருக்கிறது. ஜூலை பதினான்காம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் ஆரம்பித்த நிலைக்குத்துப் பயணம்...
இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது அவர் பேரன் ராகுல் காந்தியின் வயது 14. அடுத்த ஆறு ஆண்டுகளில் ராஜிவ் காந்தியும் படுகொலை செய்யப்பட்டார். இருபது வயது இளைஞன் ராகுலுக்கு இருந்தது இரண்டு வாய்ப்புகள். தன் அன்புக்குரிய பாட்டியையும் தந்தையும் இழக்கக் காரணமான, தனக்கும் தன் தாய்க்கும் விருப்பமில்லாத...
கோவிட் தொற்று தெரியும். பொருளாதாரத் தொற்று? தொண்ணூறுகளின் இறுதியில் ஆசியப் பொருளாதார நெருக்கடி நிலைமை நினைவிருக்கிறதா? வெளிநாட்டுக் கடனால் கிட்டத்தட்டத் திவாலாகும் நிலைக்குச் சென்றது தாய்லாந்து. சீரற்ற பொருளாதாரக் கொள்கைகளினால் தாய்லாந்தில் தொடங்கிய பொருளாதார நெருக்கடி நாளடைவில் முழு ஆசியாவையும்...
பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 36 கட்சிகள் இருக்கின்றன. தோராயமாக என்ற வார்த்தையை சேர்த்துக்கொள்ளுங்கள். சிலர் வருவதும் போவதுமாக இருப்பதால் எண்ணிக்கை கொஞ்சம் முன்னே பின்னே இருக்கும். 36 என்ற எண்ணைப் பார்த்ததும் இது ஒரு பிரம்மாண்ட வெற்றிக் கூட்டணி என்று தோன்றினால் அது தவறு. 36...
வாசகர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். கடந்த எழுபத்தாறு ஆண்டுகளில் – இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை நம் நாடு சந்தித்த மிக முக்கியமான தருணங்களை இங்கே தொகுத்திருக்கிறோம். நாம் எவற்றையெல்லாம் கடந்து வந்திருக்கிறோம் என்று நிதானமாகத் திரும்பிப் பார்க்க இது ஒரு சந்தர்ப்பம். 1947...
திமுக உறுப்பினர் சிவா மக்களவையில் பேசும்போது உப்புமாக் கதை ஒன்றைக் குறிப்பிட்டார். உப்புமா வேண்டாம் என்று சொல்லிய கல்லூரி மாணவர்களிடம் என்ன வேண்டும் என்று வாக்கெடுப்பு நடத்தினார்களாம். பெரும்பான்மை வாக்குகள், பூரி, இட்லி, மசாலா தோசை, ஆம்லெட் என்று பல உணவுகளுக்குப் பிரிந்து விழுந்ததால் யாரும்...
அமெரிக்க ரிட்டர்ன் மாப்பிள்ளைகள் போல அமெரிக்க ரிட்டர்ன் அரசியல் வாரிசுகளும் சினிமாக்களில் பிரபலம். ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் அப்படி ஒருவர். நீண்டகால முதல்வர்கள் வரிசையில் ஜோதிபாசுவை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார். முதலிடமும் கண்ணுக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கிறது. ஒரு...














