சூடான எண்ணெய்யில் ஒரு கைப்பிடி காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டால் சட்டென்று சமையலறை முழுக்க ஒரு கார நெடி பரவுமே, அதை விடவும் வேகமாக அந்தச் செய்தி பரபரப்பாகப் பரவியது.
‘இந்தியாவில் சமையல் எரிவாயு பற்றாக்குறை!’
சில நிமிடங்களில் அந்தச் செய்தியின் பின்னணி இசை போல இன்னொரு செய்தி வந்தது.
‘பற்றாக்குறை தொடர்ந்தால் இந்தியாவில் இருக்கும் அனைத்து ஹோட்டல்களும் மூடப்படலாம்.’
செய்தி கேட்டு நாடு முழுவதும் ஸ்தம்பித்து நின்ற அந்த வினாடியில் எனக்கு மட்டும் நம்பிக்கை பிறந்தது. ஆமாம், நம்பிக்கைதான். போர் நின்றுவிடும் என்ற நம்பிக்கை அல்ல. பற்றாக்குறை ஏற்படாமல் நம் தலைவர்கள் நம்மைக் காப்பாற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கை அல்ல.















Add Comment