நாங்கள் அபுதாபியிலிருந்து ஓமானுக்குக் குடிபெயர வேண்டும் என்ற நிலை வந்தபோது, எங்களுடைய பொருட்களை நாடு கடத்துவதற்குச் சிறப்பான திட்டங்கள் பலவற்றை வகுத்தேன். ஒரு ராணுவ நடவடிக்கையின் துல்லியத்துடன் அபுதாபியிலிருந்து ஓமானுக்கு எங்கள் குடிபெயர்வைத் திட்டமிட்டேன். ‘திட்டமிடல் திலகம்’ என்று எனக்குப் பட்டம் கொடுத்து சர்வதேச விருது வழங்கும் அளவுக்கு இருந்தன என் திட்டங்கள்.
மாதத்துக்கு இருமுறை, ஒன்பது மணிநேரம் காரில் பயணம் செய்து எங்களைப் பார்க்க வருமாறு என் கணவருக்குக் கட்டளையிட்டேன். ஃப்ளைடில் வந்தால் அரை மணிநேரத்தில் வந்து விடலாம். ஆனால் ஃப்ளைட்டில் முப்பது கிலோவுக்கு மேல் நாடு விட்டு நாடு கடத்த முடியாதே? கார் என்றால் கிலோவைப் பற்றிய கவலை எதுவும் இல்லாமல் அடைத்து அனுப்பலாம். அவர் மட்டுமே ஓமானுக்குத் திரும்பிச் செல்வார் என்பதால் ஓட்டுநர் இருக்கையைத் தவிர மற்ற இருக்கைகளிலும் பொருட்களை உட்கார வைத்து அனுப்ப முடியும்.
நான் அடைத்து முடித்த பிறகு காரின் பின்னோக்குக் கண்ணாடியில் பின்னால் வரும் கார்கள் தெரியாது. விதவிதமான வடிவில் அட்டைப்பெட்டிகளும் பைகளும்தான் தெரியும்.
















Add Comment