Home » நைட்டி குற்றப்பிரிவும் லுங்கி உளவுத்துறையும்
நகைச்சுவை

நைட்டி குற்றப்பிரிவும் லுங்கி உளவுத்துறையும்

‘ஹாரி பாட்டர் அண்ட் தி காப்லெட் ஆஃப் ஃபயர்’ புத்தகத்தில் ஒரு காட்சி வரும். நான் புத்தகம் என்று குறிப்பிட்டிருக்கிறேன். திரைப்படத்தை அல்ல. கட்டுரையைப் படித்துவிட்டு அந்தக் காட்சியைத் திரைப்படத்தில் தேடாதீர்கள். கிடைக்காது.

ஒரு நாவலைத் திரைப்படமாக எடுப்பதற்கென்று ஒரு ஃபார்முலா இருக்கிறது. முதலில், வாசகர்கள் ‘ஆஹா!’ என்று ரசித்த காட்சிகளை வெட்ட வேண்டும். அடுத்து, ‘அடடா!’ என்று சிந்திக்க வைத்த கருத்துகளைத் தூக்கிப் போட வேண்டும். கடைசியாக, வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த இடங்களை எல்லாம் இரக்கமே இல்லாமல் நீக்க வேண்டும். இப்படி நல்லனவற்றை எல்லாம் சுத்தம் செய்த பிறகு, நாவலை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் என்று பெருமையாக அறிவிக்கலாம்.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். ஹாரி பாட்டர் புத்தகங்களில் மந்திரம், சாகசம், சண்டைகள் மட்டுமல்ல. வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் சிறுசிறு தருணங்களும் ஏராளம் உள்ளன. அவற்றில் என்னை அதிகமாகச் சிரிக்க வைத்தது ஒரு தாத்தா போட்ட நைட்டி.

அந்த நாவலில் வரும் மந்திரவாதிகள், நம்மைப் போன்ற மந்திரம் தெரியாத சாதாரண மனிதர்களை ‘மகிள்ஸ்’ என்று அழைப்பார்கள். சில நேரங்களில் மகிள்ஸைப் போலவே உடையணிந்து அவர்களோடு கலந்துவிட வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு வரும். ஆனால் அது அவ்வளவு எளிதான வேலை இல்லை. ஏனென்றால், மந்திரம் கற்றுக்கொள்வதைவிட மனிதர்கள் என்ன உடை அணிவார்கள் என்பதைப் புரிந்துகொள்வதுதான் அவர்களுக்குக் கஷ்டமான விஷயம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!