ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதிலிருந்து நாற்பது வரையிலான பத்தாண்டுகளில் கிரகங்கள் மட்டும் சாதகமாக இருந்திருந்தால் பலூசிஸ்தான் மிக வலுவானதொரு தேசமாக உருக்கொண்டிருக்கும். விதி, ரிதம், கர்மா என்று என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் நடந்தவை நிச்சயமாக நியாயமே அல்ல.
Tag - பா. ராகவன்
பலூசிஸ்தான் முழுவதிலும் எதிர்ப்பு ஊர்வலங்களும் பேரணிகளும் அநேகமாக எல்லா நாள்களுமே இருந்தன. பிரிட்டிஷ் வீரர்கள் பொதுக்கூட்டங்களுக்கும் ஊர்வலங்களுக்கும் தடை விதித்துப் பார்த்தார்கள். மக்கள் பொருட்படுத்தவில்லை. கைது செய்து சிறை வைத்தார்கள். எதிர்ப்பு இன்னும் அதிகரித்தது.
இவ்வளவு ஸ்ட்ராங்கான கன்டென்ட் வேண்டாம், கொஞ்சம் லைட்டான விஷயங்களை நிறைய எழுதுங்கள் என்கிற கருத்து தெரிவிக்கப்பட்டது. பல வாரங்களாக எடிட்டோரியல் மீட்டிங்கில் நானும் அதைத்தான் சொல்கிறேன் என வாசகர்களுடன் ஆசிரியர் பாராவும் சேர்ந்துகொண்டார்.
பலூச்சிகளை எப்படிப் பிரித்து ஆள்வது என்று யோசித்துக்கொண்டிருந்த பிரிட்டிஷாருக்கு இது பெரும் அதிர்ச்சியளித்தது. ஏற்கெனவே அவர்கள் சேர்ந்துதான் இருந்தார்கள். இப்போது அமைப்பாகவும் திரளத் தொடங்கியிருக்கிறார்கள் என்றால், இது விபரீதம். நிச்சயமாக இதைத் தொடக்கத்திலேயே கலைத்துப் போட்டாக வேண்டும்.
பொதுவாக மனித குலத்துக்கு உப்புமா பிடிக்காது என்று சொல்லப்படும். ஆனால் நாம் வாழ்வில் அதிகம் அருந்திய சிற்றுண்டி அதுவாகத்தான் இருக்கும். உப்புமாவை வெறுத்தாலும் மனைவியை வெறுக்க முடியாது. மறுவேளை சோறு பிரச்னையாகிவிடும் என்பது எளிய காரணம்.
சிக்கல் ஏதும் உண்டாகாத வரை அன்பே அன்பே. ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று ஆகி வைத்து வழக்கு, விசாரணை என்று வருமானால் சுல்தானின் நீதிமன்றத்தில் ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்ட் வந்து உட்காருவார். வழக்குகளை அந்த ஏஜெண்ட்டின் முன்னால்தான் நடத்த வேண்டும்.
என்னதான் போலன் கணவாய்ப் பாதை பிரிட்டிஷ் அரசுக்கு அவசியத் தேவை என்றாலும் பலூசிஸ்தானை ஆள்வது பிரிட்டனுக்கு என்றல்ல; பலூச்சிகள் அல்லாத வேறு யாருக்குமே அவ்வளவு எளிதல்ல. விவசாயம் உள்பட எதுவுமே பெரிய அளவில் அப்போது அங்கே வளர்ச்சி பெறவில்லை.
அப்போது நாசிர் கான் ஆட்சி செய்துகொண்டிருந்தார். இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றி ஆண்டுகொண்டிருந்த கிழக்கிந்திய கம்பெனி, பலூசிஸ்தானை முழுதாக எடுத்து விழுங்குவதற்கு அதிக அவகாசம் பிடிக்காது. எனவே ராஜதந்திர ரீதியில் பிரிட்டிஷ் படைகளைக் கையாளுவதே நல்லதென நினைத்தார்.
நாசிர் கான் காலத்தில் அவர்கள் பலூச்சிகளாகவும் முஸ்லிம்களாகவும் இருந்தார்கள். மஹ்மூத் கான் காலத்தில் மீண்டும் பல்வேறு இனக்குழுவினராக உதிர ஆரம்பித்தார்கள். இது நடக்கும்வரை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி, பலூசிஸ்தானை வெறும் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தது. இப்போது, வேடிக்கை பார்த்தது போதும்...
முதல் முதலாக ஒரு பலூச் கூட்டமைப்பு உருவானது. ஒரு நாடாக, முடியரசாக, கான்களின் சாம்ராஜ்ஜியமாகப் பின்னாளில் பலூசிஸ்தான் புதிய தோற்றம் கண்டதற்கெல்லாம் தொடக்கப் புள்ளி அதுதான். ஜலால் கானின் வாரிசுகள் பலூசிஸ்தானை ஒரு சாம்ராஜ்ஜியமாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார்கள்.














