ஜூலை 15, 1960 அன்று நௌரோஸ் கான் தவிர மற்ற அத்தனை பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனை பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத் மத்திய சிறைச்சாலைக்குள் நிறைவேற்றப்பட்டது.
Tag - விடுதலைப் போர்
தனது எந்த முயற்சியும் எடுபடாமல் போவதைக் கண்டு கவலையடைந்தது பாகிஸ்தான் அரசு. இறுதியாக ஒரு காரியம் செய்தார்கள். போரிட்டு வெல்ல முடியாத கிழவனை ஏமாற்றி வெல்லலாம்.
அயூப் கான் மூன்றே வாரத்தில் இஸ்கந்தர் மிஸ்ராவை நீக்கிவிட்டுத் தன்னையே நாட்டின் தலைமை நிர்வாகியாக அறிவித்துக்கொண்டார். பதவிக்கு வந்த மறு கணமே அப்துல் கரீம் கானையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.
கரீம் கான் தனது கட்சி அவாமி லீக்குடன் இந்த விஷயத்தில் ஒத்துப் போகும் என்று அறிவித்தார். இதைப் பாகிஸ்தான் அரசு எதிர்பார்க்கவில்லை. அவாமி லீக்குக்கும் உஸ்தமான் குல்லுக்கும் என்ன சம்பந்தம்? எங்கிருந்து வந்தது இந்த திடீர் நட்பு?
கரீம் கான் வெளியே வந்த கையோடு ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கினார். காத்திருந்தாற்போல கலாட் தேசியக் கட்சியில் இருந்தும் இதர பல இயக்கங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் அவரோடு வந்து இணைந்துகொண்டார்கள்.
கலாட்டின் மன்னர் இரண்டாவது முறையாக ஏமாற்றப்பட்டார். அவரது சகோதரர் அப்துல் கரீம் கானைக் கைது செய்து சிறையில் அடைத்தது பாகிஸ்தான் அரசு. விசாரணையாவது ஒன்றாவது? பத்து வருடக் கடுங்காவல்.
அப்துல் கரீம் கான், தனது இயக்கத்தை இன்னும் பெரிதாக்கவும் ஆயுதப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யவும் இதர பல காரணங்களுக்காகவும் ஆப்கனிஸ்தானுக்கு ஒரு ரகசியப் பயணம் மேற்கொண்டார்.
கைபர், பஞ்சாப், சிந்து என்று மூன்று மாகாணங்களைக் கொண்டிருந்த பாகிஸ்தான், பலூசிஸ்தான் சேர்ந்து நான்கு மாகாணங்களைக் கொண்ட நாடானது.
கான் நொறுங்கிப் போனார். அழக்கூட முடியாத வலி. அழுதால் யார் ஆறுதல் சொல்வார்கள்? இது பசுமை குன்றாத புத்தம் புதிய, தரமான துரோகம். எதிர்பாராதது. எதிர்க்க முடியாததும்கூட.
இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணைவதற்கு கலாட் மன்னர் இன்னும் முடிவெடுக்கவில்லை. எனவே கலாட் ஒரு சுதந்தர நாடாகவே நீடிப்பதைப் பாகிஸ்தான் அங்கீகரிக்கிறது.













