மிளகாய்ப்பொடியும், புளியும், பெருங்காயமும் கலந்த குழம்புக்கரைசலின் ஆதார வாசனையோடு, இள முருங்கைக்காய், சிறிய வெங்காயங்கள், கருவேப்பிலை சேர்ந்து எழும் அற்புத மணம் இந்த அதிகாலையை அத்தனை சுகந்தமாக்குகிறது. கண்களை மூடி, அந்த தூரத்துக் குயிலின் ஓசையை இந்தக் கூட்டணிக்கு இசைச் சேர்க்கையாகச்...
Tag - சிறுகதை
அவனைப் பார்ப்பது அது முதன்முறையல்ல. இந்த இரண்டு நாள்களில் அதிகம் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். புதிதாக வந்திருக்கிறான். வெள்ளைச்சட்டை, சாம்பல் நிறத்தில் பேண்ட் யூனிஃபார்ம். பழைய மகாபலிபுரச் சாலையிலிருக்கும் அந்தப் பணக்காரப் பள்ளியாக இருக்கலாம். சிரிக்கும்போது சட்டென விழுந்து நிறையும்...
ரங்கமணி (ஞானக்கூத்தன்) புறப்பட வேண்டிய நேரம் விரைந்து எதிர் நோக்கி வந்து கொண்டிருக்கிறது. பேருந்தில் சென்று கொண்டிருப்பதாகவும், இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருப்பதாகவும், இரயிலிலேயே போய்க் கொண்டிருப்பதாகவும் குடும்பத்தில் ஒவ்வொருவரும் பாவனை கொண்டு இயங்குகிறார்கள். பெண்கள் பட்டுப் புடவைக்கு...
மாரியோ பெனதெத்தீ (Mario Benedetti) ஸ்பானிய மூலத்திலிருந்து ஆங்கிலத்தில்: ஜெரால்ட் ப்ரௌன் (Gerald Brown) தமிழில்: ஆர். சிவகுமார் 1920களிலிருந்து மாறாமல் ஒரே பட்ஜெட்* எங்கள் அலுவலகத்தில் அமலில் இருந்து வருகிறது. அதாவது, எங்களில் பெரும்பான்மையோர் நிலநூலோடும் பின்னக் கணக்குகளோடும் போராடிக்கொண்டிருந்த...
ஹொவாவோ கிம்மரேஸ் ரோஸா ஆங்கிலத்தில்: வில்லியம் எல். கிராஸ்மன் தமிழில்: ஆர். சிவகுமார் கடமை உணர்வுமிக்க, ஒழுங்குநிறைந்த, நேர்மையான ஒருமனிதர் என் அப்பா. நம்பிக்கையான சிலரை விசாரித்ததில், இளம்பிராயத்திலேயே, இன்னும் சொல்லப்போனால் குழந்தைப் பருவத்திலேயே அவருக்கு இந்த குணங்கள் இருந்தது தெரியவந்தது...
ரேமண்ட் கார்வர் | தமிழில் : ஜி.குப்புசாமி சமையலறையில் இன்னொரு கோப்பையை நிரப்பிக்கொண்டு வெளிமுற்றத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த படுக்கையறை சாதனைங்களைப் பார்த்தான். மெத்தை தனியாகவும் அதன் பட்டாபட்டி உறை தனியாகவும் ஒப்பனை மேசை மீதிருந்த இரண்டு தலையணைகளுக்குப் பக்கத்தில் இருந்தன. இவற்றைத் தவிர...
மார்கழி மாதக் கடுங்குளிரும், பனியும் மேட்டு லயத்தையும், லயத்தை அண்மித்து நின்ற மலைத் தொடர்களையும் முழுமையாக மறைத்துவிட்டிருந்தது. லயன் குடியிருப்புகளின் சில்லிடுகிற நிலத்தின் குளிர்ந்த தன்மை மாற சூரியன் வரவேண்டும். அதுவரை உடலை நடுக்குகின்ற குளிரை தாங்க முடியாது இருந்தது. மேட்டு லயத்தின் முன்...
புத்தாண்டின் பின்னிரவில் குறுமின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மஹாஷரண மடிவாளா மசிதேவா மேம்பாலத்தின் புராதனக் குண்டுக் குழிகளில் ஆக்டிவா நூற்று இருபத்தைந்தில் தத்தளித்துக் கொண்டிருந்த போதுதான் அவர்களால் தூக்கப்பட்டேன். அவர்கள் என்றால் ஒரு வித வினோதர்கள். மூன்று பேர். என்னை விட உயரம் குறைவாக...
பால்கனியில் நின்று அம்மாவிடம் மொபைலில் பேசிக்கொண்டிருக்கும்போது அனிதா அதைக் கவனித்தாள். லேசாய் திடுக்கிட்டாள். கிரில்லுக்கு வெளியே கம்பியில் காயப்போட்டிருந்த பச்சைப் புடைவையைக் காணோம். ‘ஒரு நிமிஷம்மா’ என்று சொல்லிவிட்டு அவசரமாக மொபைலை வாஷிங் மெஷினின் மேல் வைத்துவிட்டு பால்கனியின் சிறிய...
சரியான குளிர். இந்த வருடத்துக்கான பனியின் பொழிவு வழக்கத்தை விடவும் சில தினங்கள் முன்பாகவே தொடங்கி விட்டிருக்க வேண்டும். நகரம் முழுவதுமாகத் தண்மையின் பிடியில் ஆழ்ந்திருந்தது. மலைவாசஸ்தலம் என்றாலே என்னவோ சுற்றுலா வந்து திரும்பினால் போதும் என்பதான மனோநிலைதான் பலருக்குமுள்ளது. நுழைந்து கிறங்குவதெல்லாம்...














