Home » 20 வருடங்கள், 25 டிரான்ஸ்பர்கள்
ஆளுமை

20 வருடங்கள், 25 டிரான்ஸ்பர்கள்

துக்காராம் முண்டே

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான துக்காராம் முண்டே, தனது 20 ஆண்டுக்கால ஆட்சியர் பணியில் பணியிட மாற்றங்களில் வெள்ளிவிழா கண்டிருக்கிறார். அதாவது, தனது நேர்மைக்குப் பரிசாக இருபது வருடங்களில் 25 முறை பல இடங்களுக்கும் பந்தாடப்பட்டிருக்கிறார்.

துக்காராம் முண்டே, மகாராஷ்டிரா மாநிலத்தின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் ஆணையராகச் சென்ற மே மாதம் நியமிக்கப்பட்டார். பணிக்குச் சேர்ந்த ஓரிரு நாட்களிலேயே அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினார். மும்பையின் பிரசித்தி பெற்ற பல உணவகங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் பால் மற்றும் பனீர் வகை உணவுப் பொருட்கள் அதீதக் கலப்படத்துக்கு உள்ளானது தெரிய வந்தது. மும்பையின் முன்னணி உணவு நிறுவனங்களான Rustom & company, Cricket Club of India உள்படப் பல நிறுவனங்களின் உரிமங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டன.

தனியார் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்த உணவுத்துறை, அரசு அலுவலகங்களிலும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் விமர்சித்தது. துக்காராம் தலைமையிலான உணவுத்துறை குழு, மும்பை உயர் நீதிமன்ற வளாகத்திலேயே பிள்ளையார் சுழியைப் போட்டு ஆய்வுகளை மேற்கொண்டது. உயர் நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வந்த உணவகங்கள் முறையான FSSAI உரிமமின்றி இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. அவற்றின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டன. துக்காராமின் அதிரடிச் செயல்பாடுகளுக்கு மேற்குறிப்பிட்ட சம்பவம் ஓர் அடக்கமான உதாரணமே.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!