6. உறக்கமும் பிரபஞ்ச விதிகளும்
1940களின் அமெரிக்காவில் பிரின்ஸ்டன் நகரின் அதிகாலைப் பொழுது. பனி படர்ந்த அந்த அமைதியான தெருவில் ஒரு மனிதர் தனியாக நடந்து கொண்டிருந்தார். கலைந்த தலைமுடி, காலுறைகள் இல்லாத காலணிகள், எளிமையான கம்பளி ஆடை. அவர்தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். அவர் எப்போதும் பிரபஞ்சத்தின் ரகசியங்களைச் சிந்திப்பதிலும், ஒளியின் வேகத்தைக் கணக்கிடுவதிலும் மூழ்கியிருந்தார். அவரது சமன்பாடுகள் அண்டவெளியின் விசித்திரமான விதிகளை உலகுக்கு விளக்கின. இத்தகைய தேடல்களிலேயே அவரது இருபத்தி நான்கு மணிநேரமும் சுழன்றது.
தூக்கத்தை ஐன்ஸ்டைன் மாபெரும் தவமாக ஆராதித்தார். ‘நான் ஒரு கரடியைப் போலத் தூங்க விரும்புகிறேன்’ என்று நிருபர் வியரெக்கின் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். இரவில் பத்து மணிநேரத் தூக்கமும், பகலில் வேலைக்கு நடுவே சிறிய குட்டித் தூக்கங்களும் அவரது அத்தியாவசியத் தேவைகளாக இருந்தன. தூக்கம்தான் அவரது மூளைக்கு முழு ஆற்றலைத் தந்தது.
அதிகாலையில் விழித்ததும் அவசர அவசரமாக எந்த வேலையையும் தொடங்க மாட்டார். சிந்திக்கவும் மாட்டார். மூளையை அதன் போக்கில் விட்டுப் பிடித்தார். அன்றும் அப்படித்தான். எப்போதும் போலப் படுக்கையிலேயே அமர்ந்து காபி அருந்தினார். பின்னர், தனது பிரியமான வயலினைக் கையில் எடுத்தார். அதற்கு ‘லினா’ என்று பெயரிட்டிருந்தார். என்ன யோசித்தார் என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அது கடினமான கணிதச் சமன்பாடாகவே இருக்கும். விடை தெரியாமல் மூளை சோர்ந்து போனது.
















இந்த வாரம் 24-6 உறக்கமும் பிரபஞ்ச விதிகளும் தொடர்
அருமை. ஐன்ஸ்டைனின் வேடிக்கையான மறுபக்கத்தை
காட்டியது. ஆராய்ச்சியாளர்கள் விவாதத்திற்கு வெளியில்
காத்திருக்க சிறுமிக்கு வீட்டுப்பாடத்திற்கு உதவிய நிகழ்வு
அவருக்கு குழந்தைகள் மீது இருந்த அன்பை வெளிப்படுத்தியது.
ஆராய்ச்சியாளர்கள் உறக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதிலிருந்து மாறுபட்ட விஞ்ஞானியாக
ஐன்ஸ்டைன் இருந்திருக்கிறார்.
பாபநாசம் நடராஜன்