Home » சக்கரம் – 73
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 73

73 நோ எஸ்கேப் 

உயிர்போகும் அளவுக்கு சிரமத்தைக் கொடுத்த உனா ஏற்றம் ஹோஷியார்பூருக்கு இறங்கும்போது எதிர்பார்த்த அளவுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. மலைப்பாங்கான புனலூரிலிருந்து சமதள செங்கோட்டைக்கு இறங்கியதைப்போலக் கிடுகிடுவென சரியாதது கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது. கிண்டலடித்தாலும் பரவாயில்லை என்று கர்னல் ரேகே தட்டுப்படுகிறாரா எனத் தேடினான். எங்கே போனார் என்று தெரியவில்லை. நிர்வாகிகள் சொல்லாமல் கொள்ளாமல் மாயமாவதும் ஒரு வாரம் பத்து நாட்கள் கழித்துத் திரும்ப வருவதும் சகஜம்தான். அவசரம் என்று ஊருக்கோ அல்லது போகப்போகிற ஊருக்குப் போய் ஏற்பாடுகள் செய்வதற்கோ சென்று வருவார்கள். இன்னும் ஒரு வாரத்தில் ஜம்முவை வைத்துக்கொண்டு அதுவும் பஞ்சாப்பில் போய் இவர்கள் செய்ய என்ன இருக்கக்கூடும் என்கிற எண்ணம் தோன்றியதைப்போலவே சற்று நேரத்தில் தானாக மறைந்தது. இமயமலையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதால் இறக்கம் கூட ஏற்றத்தில் சிறிய சரிவு என்கிறபடி ஏற்றமாகவே போய்க்கொண்டிருக்கும் என இவனுக்கே தோன்றியது. இறங்குமுகப் பாதையாகவே இருந்தாலும் முட்டுக்காட்டைத் தாண்டியபின் வருகிற மகாபலிபுரச் சாலையைப்போல இறக்கமும் ஏற்றமுமாகவே இருந்தது. 

‘எங்கே ரெண்டு நாளாய் காணம்’ என்று கேட்ட டாக்டர் சிவரூபனிடம், பயிற்சிக்காக மகாபலிபுரம் வரை போயிருந்தேன் என்றதும் அவர் கையை உயர்த்தியும் தாழ்த்தியும் ஏற்ற இறக்கமான சாலை என்பதை வழக்கம்போல அபிநயத்தில் சொன்னதும் நினைவுக்கு வந்தன.  

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!