சமைப்பதை விட என்ன சமைப்பது என்ற தினசரி சிந்தனையே சமைப்பவர்களைக் கடுப்பேற்றும். நினைத்தவுடன் சட்டென செய்து முடிக்கும் ரெசிபிகள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் பிரபலமாகி இருக்கலாம். ஆனால் ஆதிகாலம் முதலே இருந்து வருகின்றன இவ்வகை உணவுகள்.
சாதத்தோடு பிசைந்து சாப்பிட ஐந்தே நிமிடங்களில் ஒரு பதார்த்தத்தைத் தயாரிக்க முடிவது அதிசயமின்றி வேறென்ன? அதுவும் நமது ருசிஞர் படையின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யுமளவு சுவையானது சம்மந்தி. இச்சொல்லின் முதல் அசையை அழுத்திச் சொல்ல வேண்டிய மலையாளப் பெயர் இது. அப்போதுதான் பிள்ளைகளைக் கட்டிக் கொடுத்திருக்கும் சம்பந்திகளை நினைவுகூராமல் கேரளத்துச் சம்மந்தியின் சுவையில் திளைக்க முடியும்.
அடுப்பில்லாமல் சமைக்கும் போட்டியில் பங்கேற்றபோது முதல்முறை சம்மந்தியைக் கண்டேன். அரிசிப் பொரியுடன் நறுக்கிய வெங்காயம், கேரட், மாங்காய்த் துருவல் சேர்த்து, தேங்காய் எண்ணெய்யில் கிளறி கொத்துமல்லி இலைகளைத் தூவுவதே நானறிந்த அடுப்பில்லாத சமையல்.
















Add Comment