பொய்த்தபின்
ஒருவர் பொய்யுரைத்த பின் அவரிடம் சங்கிலித்தொடராகப் பல மாறுதல்கள் தோன்றுகின்றன. இம்மாறுதல்களைப் பொய்யின் சுமைகள் எனலாம். Lying Responses என்பார்கள். சில மாறுதல்கள் அனிச்சையாக நிகழும். சில மாறுதல்கள், சொன்ன பொய்யை மறைக்கும் பொருட்டுப் பொய்யரால் நிகழ்த்தப்படும். இவற்றை அடையாளம் கண்டுகொள்வதே பொய்யறிதலின் முதல் படி.
பொய்யின் சுமையில் மூன்று படிநிலைகள் உள்ளன.
1. உணர்ச்சிச் சுமை (Emotional Response)
2. அனுதாப நரம்பதிர்வுச் சுமை (Sympathetic Nervous Response)
3. அறிவாற்றல் சுமை (Cognitive Response)
பொய்யரைப் பற்றி வள்ளுவருக்கு நல்ல புரிதல் இருந்துள்ளது. அதனால்தான், ‘தன்நெஞ்சறிவது பொய்யற்க, பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்’ என்று கூறியிருக்கிறார். தெரிந்து பொய் சொல்லும்போது அறம் சார்ந்த நெருடல் ஏற்படுகிறது. ‘நாம் என்ன செய்துவிட்டோம்!’ என்ற அனுதாப உணர்ச்சி மேலிடுகிறது. அந்த நெருடலும் இருப்புக் கொள்ளாமையும் உணர்ச்சிச் சுமையாக வெளிப்படுகின்றன.
















Add Comment